
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்..
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், விராட் கோலியும் பிப்ரவரி 15 ஆம் தேதி தங்களின் 2வது குழந்தையான ஆண் குழந்தையை வரவேற்றனர். அந்த குழந்தைக்கு அகாய் (Akaay) என்று பெயரிட்டுள்ளனர். இந்த ஜோடி சமூக ஊடகங்களில் ஒரே மாதிரியான பதிவுகளை பகிர்ந்துள்ளது: அதில், “மிகவும் மகிழ்ச்சியுடனும், அன்பினால் நிறைந்த இதயத்துடனும், பிப்ரவரி 15 ஆம் தேதி, எங்கள் ஆண் குழந்தை ஆகாயையும் வாமிகாவின் சிறிய சகோதரனையும் இந்த உலகிற்கு வரவேற்றோம் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க மகிழ்ச்சியடைகிறோம். உங்கள் ஆசீர்வாதங்களை நாங்கள் தேடுகிறோம். எங்கள் வாழ்வில் இந்த அழகான நேரத்தில் நல்வாழ்த்துக்கள். இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அன்பும் நன்றியும், விராட் மற்றும் அனுஷ்கா.” என பதிவிட்டுள்ளனர்.
இந்த ஜோடிக்கு முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், ரசிகர்கள் என அனைவரும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில், “உங்கள் அழகான குடும்பத்திற்கு விலைமதிப்பற்ற சேர்க்கையான அகாயின் வருகைக்கு விராட் மற்றும் அனுஷ்காவுக்கு வாழ்த்துகள்! அவரது பெயர் அறையை ஒளிரச் செய்வது போல, அவர் உங்கள் உலகத்தை முடிவில்லா மகிழ்ச்சி மற்றும் சிரிப்பால் நிரப்பட்டும். நீங்கள் என்றென்றும் போற்றும் சாகசங்கள் மற்றும் நினைவுகள் இதோ. உலகிற்கு வரவேற்கிறோம், லிட்டில் சாம்ப்!” என பதிவிட்டுள்ளார்.
விராட் கோலி சமீபத்தில் விடுமுறையில் இருந்தார் மற்றும் அவரும் அனுஷ்கா ஷர்மாவும் தங்கள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்பதால் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் டெஸ்ட் தொடரை தவறவிட்டார் என சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்ட்டது. ஆனால் தம்பதியரால் கர்ப்பம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை, ஆனால் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் குழந்தை வரவிருப்பதாகத் தெரிவித்தார், பின்னர் அவர் கூறியதைத் திரும்பப் பெற்றார்.
அனுஷ்கா ஷர்மாவும் விராட் கோலியும் 2017 இல் திருமணம் செய்துகொண்டு 2021 இல் பிறந்த வாமிகா என்ற மகளுக்கு பெற்றோர் ஆனார்கள். தற்போது அகாய் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. அனுஷ்கா சர்மா கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான சக்தா எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்துள்ளார். அவர் கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஜீரோ படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்தார்.
Congratulations to Virat and Anushka on the arrival of Akaay, a precious addition to your beautiful family! Just like his name lights up the room, may he fill your world with endless joy and laughter. Here's to the adventures and memories you'll cherish forever. Welcome to the… https://t.co/kjuoUtQ5WB
— Sachin Tendulkar (@sachin_rt) February 20, 2024