கால்பந்து உலகின் ஜாம்பவான் ஆண்ட்ரியாஸ் பிரெமி (63) காலமானார். 1990ம் ஆண்டு ரோமில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஜெர்மனி அணி அர்ஜென்டினாவுடன் பலப்பரீட்சை செய்தது. இந்தப் போட்டியில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலக கோப்பையை தட்டிச் சென்றது. அந்த கோலை அடித்தவர் ஆண்ட்ரியாஸ் பிரெமி. இவரின் மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.