தவெக அமைச்சர்களுக்குப் பணிவாக ஒன்று சொல்லிக்கொள்கிறேன், தயவுசெய்து முதலில் படியுங்கள்; இதுதான் நான் உங்களுக்குச் சொல்லும் அட்வைஸ் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் காட்டமாகத் தெரிவித்துள்ளார். தவெக அமைச்சர்களின் சமீபத்திய கருத்துக்கள் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த அதிரடி அறிவுரையை முன்வைத்தார்.

​மிசாவில் கைது செய்யப்பட்டவர்கள் எல்லோரும் சமூக விரோதிகள் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறியிருப்பது முற்றிலும் சிறுபிள்ளைத்தனமானது என்று அவர் கடுமையாகச் சாடினார். வரலாற்றுப் பின்னணியைப் புரிந்துகொள்ளாமல், மிசா சட்டத்தில் சிறை சென்ற தலைவர்களைப் பற்றிப் பொறுப்பற்ற முறையில் பேசுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

​மேலும், தவெக அமைச்சர்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல் சகட்டுமேனிக்கு சேற்றை வாரி வீசிப் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். தவெக அமைச்சர்களின் செயல்பாடுகள் மற்றும் பேச்சுக்கள் குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் முன்வைத்துள்ள இந்தக் கடுமையான விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.