
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது ஏகே 62 படத்திற்கு தயாராகி வருகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்குகிறார். இந்த படத்தின் அறிவிப்பு மே 1-ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது நேபாளத்திற்கு பைக் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
அங்கு ஒரு ஹோட்டலுக்கு சென்ற நடிகர் அஜித் அங்குள்ள சமையல் கலைஞருடன் சேர்ந்து சமையல் செய்து இருக்கிறார். இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் ஒரு பெரிய ஹீரோவாக இருக்கும் நடிகர் அஜித் ஒரு சாதாரண ஹோட்டலில் சமையல் கலைஞருடன் சேர்ந்து சமைத்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recent Ajith Kumar nepal ride
#RIDEformutualrespect #AjithKumar #Ak62 #Thala
More exclusive video only on Ajithkumar_samrajyam follow nowpic.twitter.com/J1UYxiSfV3
— Ajithkumar_Samrajyam (@Ak_Samrajyam) April 25, 2023