தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் கடந்த வருடம் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னியின் செல்வராக நடித்துள்ளார். இதன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் ரிலீஸை முன்னிட்டு தற்போது படக்குழுவினர் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது ஜெயம்ரவி மற்றும் ஐஸ்வர்யா ராய் மேடையில் ஏறி பேசினர். அதன்பிறகு இருவரும் கீழே இறங்கி வந்த போது ஐஸ்வர்யா ராய் தெரியாமல் ஜெயம் ரவியை இடித்து விட்டார். உடனே ஜெயம் ரவி மகிழ்ச்சியில் குதிக்கிறார். அதைப் பார்த்து ஐஸ்வர்யா ராய் சிரிக்கிறார். மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/NGK1103/status/1650317952183566336?s=20