பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோ திங்களன்று ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 500 புதிய விமானங்களை வாங்க ஆர்டர் செய்துள்ளது. ஏர்பஸ் உடன் எந்த ஒரு விமான நிறுவனமும் இதுவரை இது போன்று மிகப்பெரிய ஆர்டர் செய்ததில்லை. ஆர்டரின் நிதி விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில், டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் ஏர்பஸ் மற்றும் போயிங்குடன் 470 விமானங்களுக்கு ஆர்டர் செய்திருந்தது. தற்போது, ​​இண்டிகோ 300க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. 2030-2035 ஆம் ஆண்டிக்குள் கிட்டத்தட்ட 1,000 விமானங்களை அந்த நிறுவனம் சொந்தமாக்கும்.