திமுக மேடையில் பேசிய திண்டுக்கல் லியோனி,  இன்னைக்கு நான் இந்த மேடையில் சவால் விட்டு சொல்றேன்…. எதிர் தரப்பில் ஒரு அதிமுககாரர் யாரா இருந்தாலும் சரி, அது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாராக இருந்தாலும் சரி…. எனக்கு நேரா மேடை போட்டு…  கலைஞருடைய சாதனையை நான் சொல்றேன், ஜெயலலிதா அம்மாவுடைய சாதனையை நீ சொல்லு.. யாருக்கு அதிக கைதட்டு கிடைக்குது? யாருக்கு அதிக வரவேற்பு இருக்குது ?

இன்னைக்கு சவால் விட தயாரா? அம்மாவின் ஆட்சி… அம்மாவின் ஆட்சி… அம்மாவின் ஆட்சின்னு பேசினாரே,   எடப்பாடி பழனிச்சாமி….  அந்த அம்மாவுக்கு நீங்க என்னையா செஞ்சீங்க? அந்த அம்மா பெயர்ல இதுவரைக்கு ஏதாவது ஒரு சின்ன பாத்ரூம் ஆவது கட்டினீங்களா ? …  அம்மா  பெயர்ல சின்ன மருத்துவமனை கட்டினீங்களா…?  நான்கு ஆண்டுகள் எடப்பாடி பழனிச்சாமி அந்த அம்மா பெயர்ல ஒன்னு கூட செய்யல…

சும்மா கிடந்த சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு எம்ஜிஆர் பெயரை  வச்சாங்க… கோயம்பேடு மெட்ரோ ஸ்டேஷனுக்கு ஜெயலலிதா பெயரை கொண்டு போய்…  ரயில்வே ஸ்டேஷனுக்கு வச்சீங்களே ஒழிய,  உங்க அம்மாவுக்காக நீங்க என்ன செஞ்சீங்க ? ஆனால் என் தளபதி மு.க ஸ்டாலின் எங்கள் தலைவருடைய பெயரால் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்ற…  ஆசியாவிலேயே பெரிய நூலகத்தை அமைத்துக் காட்டியவர் நம் தளபதி என பேசினார்.