இன்றுடன் 2024 ஆண்டு முடிந்து, 2025 ஆண்டு பிறக்க உள்ள நிலையில், புத்தாண்டை வரவேற்க உலக முழுவதும் தயாராகி வருகிறது. தீர்க்கரேகையின் அடிப்படையில் பூமி 24 மணி நேர மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது. அவை ஒவ்வொன்றும் ஒரு நேரத்தை கொண்டுள்ளது. இன்று இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது. என்றாலும் உலகம் முழுவதும் ஒவ்வொரு நேரத்தை பின்பற்றுகிறது. இதனால் சில நாடுகள் முதலாவதும் சில நாடுகள் தாமதமாகவும் கொண்டாடுகிறது. இந்திய நேரம் உலகளாவிய நேரத்தை விட 5 மணி 30 நிமிடம் முன்னதாக உள்ளது.

பூமியில் கிரிட்டிமாட்டி என்ற தீவு முதலாவதாக புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனுடன் பசுபிக்கில் இருக்கும் டோங்கோ, சமோயா உள்ளிட்ட தீவுகளில் இன்று மதியம் 3.30 மணி அளவில் முதலாவதாக புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. சமோவா மற்றும் நியு தீவுகளில் நாளை 5.30 மணி அளவில் கடைசியாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் புத்தாண்டு பிறப்பதற்கு முன்பே 41 நாடுகளில் புத்தாண்டு பிறந்திருக்கும். அந்த நாடுகளில் கிரிபாட்டி, சமோவா, டோங்கோ, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பப்புவா நியூ கினியா, ரஷ்யா, மியான்மர் ,ஜப்பான் மற்றும் இந்தோனேசியா ஆகியவை அடங்கும்.