
வயநாடு எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததின் காரணமாக தற்போது வயநாடு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியின் தங்கையான பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். பா.ஜ.க கட்சியின் சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டிருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சத்யன் மொகேரி போட்டியிடுகிறார். இந்த நிலையில் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்த ராகுல் காந்தி, தனது தங்கையுடன் வயநாட்டில் உள்ள காரப்புழா அணை பகுதிக்கு சென்றுள்ளார். அங்குதான் கேரளாவிலேயே மிகப்பெரிய நீளமான ஜிப்லைன் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் ராகுல் காந்தி பயணம் செய்தார். இது குறித்த பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறியதாவது, “தென்னிந்தியாவின் ராட்சத ஊஞ்சல்”வயநாடு எப்பொழுதும் பிரம்மிப்பாகவே இருக்கும். இந்த ஜிப்லைன் அனுபவத்தின் ஒவ்வொரு நொடியும் என் வாழ்வில் மறக்க முடியாதது ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் வயநாடு தொகுதியில் ஆட்சிக்கு வந்தால் வயநாடு மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக மாற்றப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். ராகுல் காந்தி ஜிப் லைனில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.