PMShri பள்ளிகள் தமிழ்நாட்டிற்கு வந்தால், மாணவர்கள் 3 மொழிகள் கற்க வேண்டும். இதன் மூலம், இந்தி பேசாத மாநில மாணவர்களுக்கு இந்தித் திணிப்பு நடைபெறும்.

தமிழ்நாடு மீண்டும் ஒரு மொழி போராட்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படும் என்று ஒன்றிய பாஜக அரசை எச்சரிக்கிற அறப்போராட்டம் தான் இது. ஒன்றிய அரசை கண்டித்து சென்னையில் திமுக கூட்டணி கட்சிகள் நடத்தி வரும் அறப்போராட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.