செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,  UPA  அரசாங்கத்தோட 2014க்கு முன்னாடி பார்த்தீங்கன்னா…  சிலிண்டர் விலை ஆயிரத்தை தாண்டியது. அதற்கு பின்பாக பல்வேறு காலகட்டங்களில் சிலிண்டர் விலை சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப சில சமயம்…  25 ரூபாய் குறைச்சி இருக்காங்க, இல்லன்னா…  அதைவிட குறைவா குறைச்சி இருக்காங்க….  ஏனென்றால் பெட்ரோலிய பொருட்கள் நம்ம நாட்டில் உற்பத்தியாவதில்லை.

வெளியில் இருந்து வரக்கூடிய பொருள், சர்வதேச சந்தையில் இருக்கக்கூடிய நிலவரத்தை பொறுத்து…  நாட்டினுடைய பொருளாதாரத்தை பொறுத்துதான் அந்த நிர்ணயம் நடக்கிறது. இப்போ நடந்திருக்கிறது விலை குறைப்பு என்பது அதிகமான ஒரு விலை. இருக்கக்கூடிய காலத்திலே 200 ரூபாய் ஒரு சிலிண்டருக்கு குறைத்திருப்பது அப்படிங்கறது மிகப் பெரிய பலன் மகளிருக்கு சென்று சேர்கிறது. இன்னொரு முக்கியமான விஷயத்தை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

UPA அரசாங்கத்தினுடைய 2014 வரை இருக்கின்ற கேஸ் இணைப்புகள் எத்தனை ? கிட்டத்தட்ட 14 கோடிக்கு பக்கம் இருந்ததை  இன்று கூடுதலாக 10 கோடி  இணைப்புகள் ஏழைப் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டிருக்கிறது. நீங்கள் ஏற்கனவே இருந்தவங்க… கேஸ் கொடுத்தவுங்களுக்கு மானியம் கொடுக்கிறது வேற, ஆனால் ஏழைப் பெண்கள் இதுவரைக்கும்… கேஸ் இணைப்பு இல்லாதவர்கள்….  பத்து கோடி பெண்களுக்கு கேஸ் இணைப்பு புதிதாக கொடுக்கப்பட்டிருக்கு… அந்த புதிதாக கொடுக்கப்பட்டிருக்கின்ற  இணைப்புகளுக்கு கூடுதலாக ஒரு சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் கொடுக்கிறோம்.

இதெல்லாம் தேர்தல் காலத்தில் இல்ல, அறிவிச்சது அல்ல… இது வாக்குறுதி அல்ல… ஆனாலும் பாரத பிரதமர் மோடி அவர்கள்….  ஏழைப் பெண்களுக்கு 400 ரூபாய் ஒரு சிலிண்டருக்கு குறையுது. மற்ற நடுத்தர குடும்பத்திற்கும்,  எல்லா எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துறவங்க எல்லாருக்கும் 200 ரூபாய் குறையுது. ஆனால் தேர்தல் வாக்குறுதியில்  சிலிண்டருக்கு 100 ரூபாய் என அறிவிச்சுட்டு,  இரண்டு வருஷத்துக்கு மேல ஆட்சி நடத்துற இந்த மாநில அரசு, இத பத்தி பேசுறதுக்கு எந்த விதமான அருகதையும் இல்லை என தெரிவித்தார்.