என் மண், என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, சகோதர சகோதரிகளே இந்த மேடைக்கு வருவதற்கு முன்பு இரண்டு வீர மகன்களுக்கு… தெய்வத்திருமானர் அவர்களுக்கு…  மாலை அணிவித்துவிட்டு, மரியாதையை செலுத்திவிட்டு இங்கு வந்தோம். நம்  மீது குற்றப்பரம்பரை சட்டம் நடைமுறைக்கு வந்த பொழுது…  அதை எதிர்த்து உசிலம்பட்டி மண்ணே கொதித்து எழுந்தது.

குறிப்பாக நம்முடைய தெய்வத்திரு மகனார் முத்துராமலிங்கம் ஐயா அவர்கள் , அதற்காக1940 இலிருந்து 1945 வரை சிறைவாசம் அனுபவித்தார். அவருடைய கடமையான போராட்டத்திற்காக 1947ல் ஜூலை மாதத்தில் குற்ற பரம்பரை சட்டத்தில….  இங்கு இருக்கின்ற கள்ளர் சமுதாயத்தை வைத்திருந்தார்கள். அதையெல்லாம் உடைத்து தகர்த்தெறிந்து,  1947 இல் ஜூலை மாதத்தில் குற்ற பரம்பரை சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.

எதற்காக குற்றப்பரம்பரை சட்டத்திலே சேர்க்கப்பட்டார் என்று சொல்வது ? என்னுடைய கடமையாக நினைக்கிறேன் இந்த மண்ணிலே… வீர திருமகனார், தெய்வத் திருமகனார், பசும்பொன் முத்துராமலிங்க தேவரய்யாவின் வாரிசாக கருதப்பட்ட கல்வி செம்மல் ஐயா மூக்கையா தேவர் அவர்களுக்கும், மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு இந்த மலை மேடைக்கு வந்திருக்கின்றோம். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது  இது ஒரு நாடக பார்ப்பார்கள்.

ஆனால் அப்படி இல்லை. உசிலம்பட்டியை பொருத்தவரை ஒருநாடக நீங்கள் எப்போதும் இருந்ததில்லை. சிறு தெய்வங்கள் வழிபாடு உங்களுக்குரிய கலவன் தெய்வங்கள், உங்களுக்குரிய குல தெய்வங்கள், உங்களுக்கு உரிய சம்பிரதாயங்கள், உங்களுக்கு உரிய மாண்புகள், உங்களுக்கு உரிய பூஜை முறைகள், உங்களுக்கு உரிய பூசாரிகள்.  இது  அனைத்துமே உசிலம்பட்டியில் இருக்கிறது. அதனால் தான் இதனை புத்தூர் நாடு, கருமாத்தார் நாடு, பாப்பாபட்டி நாடு, கொக்குக்குளம் நாடு, தும்மக்குண்டு நாடு என இப்படி 8 நாட்டிலே வசிக்கக்கூடிய நீங்கள்.

சத்தியத்திற்கு மட்டுமே கட்டுப்படுபவர்கள்.. வேறு யாருக்கும் நீங்கள் கட்டுப்பட மாட்டீர்கள்.  ஆண்டவனுக்கும்,  சத்தியத்திற்கும் மட்டுமே கட்டுப்படுபவர்கள் இந்த எட்டு நாட்டிலே வசித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதை எல்லாம்  சரித்திர சான்று விஷயம் என்னவென்றால் ? உலகம் முழுவதும்  கட்டியாண்ட ஆங்கிலேயர்கள் உங்களுக்கு வரி கொடுத்து இங்கு இருந்தார்கள். உலகம் முழுவதுமே கட்டி ஆண்ட ஆங்கிலேயர்கள்.. வரியை வாங்கிய ஆங்கிலேயர்கள்…  இங்கே உங்களுக்கு வரியை கொடுத்து ஆங்கிலேயர்கள் இங்கிருந்தார்கள்.

அப்படி ஒரு வீரத்திற்கு பேர் போனவர்கள் நீங்கள். இன்னைக்கு நம்முடைய குலதெய்வங்கள் வழிபாட்டையும்,  குலசாமியையும்,  அய்யனாரையும்,  கருப்பண்ணசாமியையும் நாங்கள் வேறெடுத்து தீருவோம்… எங்களுக்கு சனாதன கூட்டம் வேண்டாம் என்று தமிழகத்திலே ஒரு கூட்டம் கிளப்பி  இருக்கிறது. ஆங்கிலேயர்களை ஓட ஓட விரட்டிய நீங்கள், சனாதன தர்மத்தை வேண்டாம் என சொன்ன  கூட்டத்தை எப்படி வெறுத்தீர்கள் என்பதை 2024 தேர்தலில் நீங்கள் காட்டத்தான் போகிறீர்கள் என தெரிவித்தார்.