செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, இவ்வளவு நாள் சிறுபான்மை மக்களை ஒரு மாயாஜாலத்தில் வச்சுக்கிட்டு இருந்தாங்க. சிறுபான்மை மக்களை இவர்தான் ஆதரிப்பது போலவும்,  இவர்கள்தான் உதவி செய்து போலவும் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு அந்த வட்டத்திற்குள்  வைத்துக் கொண்டிருந்தார்கள்.

இன்றைக்கு சிறுபான்மையின் மக்கள் எங்களை நாடுகின்ற பொழுது…  இப்படிப்பட்ட பிரச்சனை எல்லாம் கொண்டு வருகின்ற பொழுது அவருக்கு கோபம் வருகிறது, இதுதான் உண்மை. எப்பொழுதுமே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பொறுத்த வரைக்கும்….. தமிழகத்தை பொறுத்தவரைக்கும்…. சட்டத்தின் ஆட்சிதான் நடந்துகிட்டு இருக்குது. யார் தவறு செய்தாலும் உரிய தண்டனை பெற்று தருவதற்கு அண்ணா திமுக அரசு நடவடிக்கை எடுக்குது.

ஆனால் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அப்படிப்பட்ட நிலைமையே  கிடையாது. நான் ஏற்கனவே சொன்னேன்….  ஒருவர் கொலை செய்யப்பட்டு  இருக்கிறார். அதை வைத்து உக்கடம் பகுதியில்… இஸ்லாமிய பெருமக்கள் அதிகமாக வாழுகின்ற அந்தப் பகுதியில்… 1997 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில்…  அங்கு வீடு புகுந்து…. அங்கு இருக்கின்ற வீடுகளையெல்லாம் சூறையாடி….  கோடிக்கணக்கான பொருட்களை சேதப்படுத்தி… தீக்கிரையாக்கி யது திமுக ஆட்சி. 

19 இஸ்லாமியர்கள் அப்போது சுட்டுக் கொல்லப்பட்டது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்…  இதெல்லாம் மறைத்து பேசுகிறார்.  திமுக இஸ்லாமியர்களுக்கு என்ன  செஞ்சுட்டாங்க ? நாங்க இவ்வளவு செஞ்சு இருக்கிறோம்…. இவ்வளவு  பாதுகாத்திருக்கின்றோம். தமிழகம் முழுவதும் சிறுபான்மை வாக்கு சிதறி விடுமோ என்று தான் திமுகவுக்கு கோபம். இதுவரைக்கும் சிறுபான்மை மக்களிடம் நாடகத்தை நடத்திட்டு இருந்தாரு. சிறுபான்மை மக்களை இவர்கள் தான் ஆதரிப்பது போலவும்,  இவர்கள் ஆட்சிக்கு வந்தால்தான் சிறுபான்மைய மக்கள் பாதுகாப்பது போலவும்,  ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வந்தார்.

இன்னைக்கு அந்த மாய தோற்றம் காணாமல் போகின்ற சூழ்நிலை வருகின்ற பொழுது….  இன்றைக்கு இஸ்லாமியர்கள் எல்லாம் விழித்துக் கொண்டாங்க. சிறுபான்மை மக்கள் எல்லாம் விழித்துக் கொண்டார்கள். ஆகவே இப்படிப்பட்ட தருணத்தில் இப்படிப்பட்ட கருத்தை சொல்லி திசை திருப்புவதற்கு தான் முதலமைச்சர் இந்த கவன ஈர்ப்பு மாறாக பேசுகிறார். எம்ஜிஆர் நூற்றாண்டின் போது, ஆயிரம் பேருக்கு மேல விடுதலை பண்ணுனோம். இதுல இஸ்லாமியர்களும் அடங்கி இருக்காங்க.  இந்த ஆயிரம் பேரில் இஸ்லாமியர்களும் விடுதலை ஆகி இருக்காங்க என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்தார்.