அ.தி.மு.க பொதுச் செயலாளராக EPS பொறுப்பேற்றதும் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாமை துவங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக மாற்றுக்கட்சியினர் அக்கட்சிகளிலிருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாஜக, அமமுக ஆகிய கட்சிகளில் உள்ள நிர்வாகிகள் அக்கட்சிகளில் இருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக்கொள்கின்றனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் தங்களை ADMK-ல் இணைத்துக்கொண்டனர். 2 கோடி புதிய உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் உறுப்பினர் சேர்க்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ், அமமுக, பாமக, தவாக, தேமுதிக கட்சிகளை சேர்ந்தவர்கள் கூண்டோடு விலகி அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.