தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கினார். அவருடைய முதல் மாநாடு கடந்த மாதம் 27ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் இன்னும் ஒரு மாதமாகவில்லை. ஆனால் முதல் மாநாடு நடந்து முடிந்ததிலிருந்து விஜய் திமுக மீது வைத்த விமர்சனங்கள் பெரிய அளவில் பேசப்படுகிறது. நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பிறகு முதல் மாநாட்டின் போது கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தின் பங்கு உண்டு என்று கூறிய விஷயமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமூக வலைதளத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில் திமுக மீது முதல் மாநாட்டின் போது விஜய் வைத்த விமர்சனங்கள் பெரிய அளவில் பேசப்படுகிறது எனவும் மக்கள் மத்தியில் சென்றடைந்து விட்டது எனவும் ஒருவர் கூறுகிறார். அதே நேரத்தில் கடந்த 4 வருடங்களில் திமுகவை பற்றி எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தது பெரிய அளவில் ரீச் ஆகவில்லை என்று கூறியுள்ளார்.

அதாவது திமுக மீதான தவறுகளை எடப்பாடி பழனிசாமி அழுத்தம் திருத்தமாக சுட்டிக்காட்ட தவறிவிட்டார் என்று கூறுகிறார். மேலும் திமுகவை 4 வருடங்களாக அதிமுக விமர்சித்தது மக்கள் மத்தியில் ஈடுபடவில்லை எனவும் விஜய் நடத்திய ஒரே மாநாட்டில் அவர் வைத்த விமர்சனங்கள் பெரிய அளவில் பேசப்படுகிறது என்றும் அவர் கூறிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை எடப்பாடி பழனிச்சாமி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறுகிறார். மேலும் ஏற்கனவே நடிகர் விஜயின் அரசியல் வருகை தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் மத்தியில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கருத்து தெரிவிக்கும் நிலையில் தற்போது அதிமுகவின் இடத்திற்கு தமிழக வெற்றிக்கழகம் வந்துவிட்டது என்பது போல் அவர் பேசிய வீடியோ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.