
தமிழ்நாடு முழுவதும் முத்தம் 37,553 அரசு பள்ளிகள் உள்ளன. இந்த அரசு பள்ளிகளில் கடந்த 1-ம் தேதி முதல் மாணவ சேர்க்கை தொடங்கியது. இதனை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைகள் நடைபெற்று வருகிறது. அதிகபட்சமாக ஒன்றாம் வகுப்புக்கு தான் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் கடந்த 1-ம் தேதி முதல் 20ம் தேதி வரை, மொத்தம் 14 வேலை நாட்களில் மாணவ சேர்க்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 8000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மொத்தமாக 1,06,268 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் நோக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. மேலும் 5 லட்சம் மாணவர்கள் சேர வேண்டும் என்ற இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.