
உதயநிதி ஸ்டாலின் தமிழக இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சராக இருந்தார் கடந்த செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக நியமித்தனர். இந்த நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் இல்லாத சமயங்களில் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கும் அமைச்சரவை கூட்டங்களை நடத்துவதற்கும் அதிகாரம் படைத்தவர்.
தற்போது துணை முதல்வர் குறித்து மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 8-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது. அந்த கூட்டத்தில் துணை முதல்வராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்து பேசி ஒப்புதல் கொடுக்க உள்ளதாக தெரிகிறது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவை பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.