பிறப்புச் சான்றிதழ் என்பது ஒவ்வொரு மனிதனின் முக்கியமான ஆவணமாக இருக்கிறது. அதாவது ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவது, வாக்காளர் பட்டியல், பாஸ்போர்ட் வழங்குதல் மற்றும் அரசு பணிகள் போன்ற அனைத்துக்கும் பிறப்புச் சான்றிதழ் என்பது தேவைப்படுகிறது. இந்த பிறப்பு சான்றிதழ் சிலருக்கு பெயர் இல்லாமல் வழங்கப்பட்டு இருக்கும். இந்நிலையில் தற்போது அதில் பெயர் பதிவு செய்து கொள்ள புதிய வாய்ப்பை கோவை மாநகராட்சி ஆணையர் ஏற்படுத்தியுள்ளார்.

அது பற்றி விரிவாக காண்போம், அதாவது 2017 ம் ஆண்டிற்குள் பிறந்தவர்களின் பெயர் உள்ள பிறப்பு சான்றிதழ்களைப் பெற மாநகராட்சி அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். அங்கு குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதி இருக்கும் பள்ளி சான்றிதழ், பள்ளி மதிப்பெண் சான்றிதழ் என்று ஏதாவது ஒன்று கொண்டு செல்ல வேண்டும். அதன் பிறகு அதற்கான உரிய கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று கோவை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.