
அதிவேகமான jio 5G இணையச் சேவை தமிழகத்தின் திருப்பூர் உட்பட 16 நகரங்களில் துவங்கப்பட்டுள்ளது. அதோடு நம் நாட்டில் மொத்தம் 134 நகரங்களில் 5G சேவையை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது. சமீபத்தில் மதுரை, கோவை, திருச்சி உள்பட 6 நகரங்களில் 5G சேவையானது துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஜியோ தமிழ்நாடு பிரிவு வர்த்தகத் தலைவரான ஹேமந்த்குமார் கூறியதாவது, “jio 5ஜி சேவையை தமிழகத்திற்கு கொண்டு வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். 5G சேவை நமது வாழ்க்கை முறையையே மாற்றியமைக்க போகிறது எனில், அது மிகையாகாது. 5G எனில் அதிவேக இணைய சேவை.
1 ஜிபிபிஎஸ் என்பதால் பல பேரும் ஒரே நேரத்தில் சிக்கல் இன்றி 5G சேவையை பெறமுடியும். அது குறைவாக இருப்பின் பலருக்கும் நெட்வொர்க் கிடைப்பதில் பிரச்னை நிலவும். விவசாயம், கல்வி, மருத்துவம் ஆகிய பல துறைகளுக்கு 5G சேவையானது முக்கியமாக பயன்படும். 700 megahertz ஜியோவிடம் மட்டும்தான் இருப்பதாக குறிப்பிட்ட அவர், சென்னை, மதுரை எல்லாம் மிகப் பழமையான நகரங்கள் என்பதால் வீடுகள் நெருக்கமாகவும், தெருக்கள் குறுகலாகவும் இருக்கும். அப்பகுதிகளுக்கு நிறைய டவர்கள் வைக்க இயலாது. 700 megahertz உள்ளதால் அந்த இடங்களில் ஜியோ வாயிலாக ஈஸியாக நெட்வொர்க் கிடைத்து விடும். jio 4G-ன் தொழில்நுட்பங்கள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது” என அவர் கூறினார்.