தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வரும் ஜெயசுதா தமிழில் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பின் ரஜினி, கமல் உள்ளிட்டோர் உடன் நடித்திருக்கின்றார். இவர் நிதின் கபூர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள்.

2017 ஆம் வருடம் நிதின் கபூர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதன்பின் சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த ஜெயசுதா தற்போது மீண்டும் நடித்து வருகின்றார். அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தார். 64 வயதாகும் ஜெயசுதா தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.

64 வயதாகும் ஜெயசுதா வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது. ஆனால் அவர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. நடிகை ஜெயசுதா தனது புதிய கணவருடன் இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

இவன் முதலில் வட்டே ரமேஷை திருமணம் செய்தார். ஆனால் அவர்களின் உறவு நீண்ட காலம் நீடிக்கவில்லை. இதன்பின் விவாகரத்து செய்து நிதின் கபூரை திருமணம் செய்தார். அவர் தற்கொலை செய்த நிலையில் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அவரின் மறைவுக்கு பின் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டிருக்கின்றார்.