மோகன்லால், மீனா நடிப்பில் சித்து ஜோசப் இயக்கத்தில் சென்ற 2013-ம் வருடம் வெளியான திரைப்படம் திரிஷ்யம். இத்திரைப்படம் வசூல் இந்திய திரை உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த படத்தில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் அதிகாரி மகனை மீனா கொலை செய்கின்றார். இதன்பின் பிணத்தை மறைத்து குடும்பத்தை காப்பாற்ற மோகன்லால் எப்படி போராடுகின்றார் என்பதே இந்த படத்தின் கதையாகும். இந்தப் படம் தமிழில் கமல், கௌதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது.

இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வசூல் பார்த்த நிலையில் தற்போது மோகன்லால், மீனா நடிப்பில் திரிஷ்யம் 2 திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியாகி 250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய ஒப்பந்தம் ஏற்படுத்தபட்டிருக்கின்றது. மேலும் ஜப்பான் கொரிய மொழிகளிலும் ரீமேக் ஆக இருக்கின்றது. இத்திரைப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றது.