
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த ஷாலினி முதல்முறையாக 4 வயதில் மலையாளத்தில் வெளியான எண்டே ‘மாமாட்டிக்குட்டியம்மாக்கு’ என்ற படத்தில் அறிமுகமானார். இவர் தனது முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரளா அரசின் விருதைப் பெற்றார். இதைத்தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல படத்தில் நடித்து பெயர் பெற்றார். அதன் பின் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் அஜித்தை திருமணம் செய்த பிறகு அவர் படங்களில் நடிப்பதில்லை.
இந்நிலையில் இவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி கடைசியாக அவர் சினிமாவில் நடிக்கும் போதே ரூ. 50 லட்சம் வரை சம்பளம் வாங்கினார் என்று கூறப்படுகிறது. அப்படி டாப் நடிகையாக வலம் வந்த இவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூபாய் 50 கோடிக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. நடிகை ஷாலினியின் கணவர் அஜித்தின் சொத்து மதிப்பு ரூபாய் 200 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.