தி ஃபேமிலி மேன் வெப் தொடர் புகழ்  ராஜ் மற்றும் டி.கே. தற்போது சமந்தா மற்றும் வருண் தவான் லீடிங் ரோடில் நடிக்கும் சிடாடல் என்னும் வெப் தொடரை இயக்கி வருகிறார்கள். இவர்கள் இயக்கத்தில் அண்மையில் விஜய் சேதுபதி நடித்த பார்சி வெப் தொடர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்பிறகு சிடாடல் வெப் தொடருக்காக தற்போது படக்குழுவினர் நைனிடால் சென்றிருக்கிறார்கள். இந்த வெப் தொடரில் வருண் தவான் மற்றும் சமந்தா உளவாளியாக நடிப்பதால் படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது. இதன் காரணமாக ஹாலிவுட் பயிற்சியாளர் சமந்தா மற்றும் வருண் தவானுக்கு பயிற்சி கொடுப்பதற்காக வரவழைக்கப் பட்டுள்ளார்.

நடிகை சமந்தா சண்டை பயிற்சியில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் வைத்து நடிகை சமந்தாவுக்கு கைகளில் காயம் ஏற்பட்டு இரத்தம் வந்துள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை சமந்தா தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஏற்கனவே மயோசிடிஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது தான் அதிலிருந்து மீண்டும் படப்பிடிப்பில்  கலந்து கொள்கிறார். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் வைத்து நடிகை சமந்தாவுக்கு திடீரென ரத்தக்காயம் ஏற்பட்டது அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நடிகை சமந்தா விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து தற்போது குஷி என்ற திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில், சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.