பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் அண்மையில் பதான் திரைப்படம் வெளியாகி 1000 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க பிரியாமணி, விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் ஒரு‌ பேட்டியில் நடிகர் ஷாருக்கான் நடிகை நயன்தாராவின் அழகை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நயன்தாரா மிகவும் இனிமையானவர். மிகப்பெரிய அழகி. அவரோடு சேர்ந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விஜய் சேதுபதி ஒரு திறமையான நடிகர். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. மேலும் ஜவான் திரைப்படம் கமர்ஷியல் திரில்லர் படமாக உருவாகியுள்ளது என்று கூறினார்.