பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் இலியானா. இவர் தமிழில் கேடி மற்றும் நண்பன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ள இலியானா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். ஆனால் குழந்தையின் அப்பா யார் என்பதை இலியானா சொல்லவில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஆஸ்திரேலிய புகைப்பட கலைஞர் ஆண்ட்ரு என்பவரை இலியானா காதலித்து வந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு நடிகை கத்ரினா கைஃபின் சகோதரர் செபாஸ்டியன் என்பவரை நடிகை இலியானா காதலித்து வருவதாக தகவல்கள் பரவி வந்தது. இருப்பினும் இலியானா காதலை உறுதிப்படுத்தாததோடு தன்னுடைய கணவர் யார் என்பதையும் சொல்லவில்லை. இந்நிலையில் நடிகை இலியானா கர்ப்பமாக இருக்கும் தன்னுடைய புகைப்படங்களை தற்போது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.