நடிகர் யோகி பாபு மற்றும் நடிகை வேதிகா ஆகியோர் நடிக்கும் “கஜானா” திரைப்படம் டிசம்பர் மாதம் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் இனிகோ பிரபாகர், சாந்தினி, வேலு பிரபாகரன், மொட்ட ராஜேந்திரன் போன்ற பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை பிரபாதீஸ் சாங்ஸ் இயக்கியுள்ளார். மேலும் ஒளிப்பதிவு கோபித்துறை சாமி, வினோத் ஜே.பி ஆகியோர் சிறப்பாக செய்துள்ளனர். படத்தின் இசை அச்சு ராஜா மணி செய்துள்ளார்.

-இந்தப் படத்தை போர் ஸ்கொயர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகிறது. இந்தப் படம் பழங்காலத்தில் தமிழரசர் புதைத்து வைத்த புதையலை தேடிச் செல்லும் திகில் நிறைந்த கதை ஆகும். அந்த புதையலை தேடி செல்லும் இளைஞர்களின் சாகச பயணம் மற்றும் அந்த புதையலை பாதுகாக்கும் வினோதமான உயிரினங்கள் போன்ற கதை அம்சத்தோடு திகில் நிறைந்த காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.