தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தற்போது ஒரு டுவிட்டர் பதிவை போட்டுள்ளார். அதில் நான் மறுபடியும் முயற்சி செய்தேன். ஆனால் தோற்றுவிட்டேன். நான் பாடம் கற்றுக் கொண்டேன். போன முறை தோல்வி இல்லை. என் தவறும் அல்ல.

அது துரோகம் மற்றும் ஏமாற்றுதல் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் மீண்டும் விவாகரத்து செய்யப் போகிறீர்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் தற்போது விஷ்ணு விஷாலின் பதிவால் இரண்டாவது மனைவியையும் அவர் விவாகரத்து செய்யப் போகிறார் என்று வலைதளத்தில் தகவல் தீயாக பரவி வருகிறது.