தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருடைய படங்கள் விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக வெற்றி படமாகவே அமைகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் அறிவிப்பு கடந்த வருடம் வெளியான நிலையில் அண்மையில் நடிகர் சிவகார்த்திகேயன் இப்படம் குறித்து பேசியுள்ளார். அதாவது கமல் சாரின் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் மிக மிக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட சிவகார்த்திகேயனை பார்ப்பீர்கள் என்றும் கூறியுள்ளார். நடனத்தில் பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயன் கமல் தயாரிப்பில் நடிக்கும் படத்தில் நடனமே ஆட மாட்டார் என்றும், நகைச்சுவை, டான்ஸ், கமர்சியல் அம்சங்களை தவிர்த்து நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதனால் மாறுபட்ட சிவகார்த்திகேயனை பார்க்கலாம் என ரசிகர்கள் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க இருக்கிறார்.