
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சிம்பு தற்போது ஒபலி கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில், நடிகை சாய்ஷா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த படம் கடந்த 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில், முதல் நாளில் 12.3 கோடி ரூபாய் வசூலித்திருந்ததாக பட குழு அறிவித்தது. சமீபத்தில் பத்துதல படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. இந்நிலையில் தற்போது பத்து தல படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படம் வருகின்ற 27-ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது. மேலும் இந்த தகவலை படக்குழு போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.
A thrilling action treat with a captivating storyline that’s certain to leave an impact long after the story ends 💥#PathuThala is coming to @PrimeVideoIN on April 27#PathuThalaOnPrime#Atman @SilambarasanTR_ @StudioGreen2 @Kegvraja @PenMovies @jayantilalgada pic.twitter.com/YfJsJhmKtL
— Studio Green (@StudioGreen2) April 22, 2023