தமிழக வெற்றிக் கழகம் நடிகர் விஜயால் தமிழகத்தில் தொடங்கப்பட்ட கட்சியாகும். இதன் முதல் மாநாடு தற்போது விக்கிரவாண்டில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் தேர்தலுக்கு தயாராகி அதற்கான வியூகங்களை அமைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் பல கட்சியில்  உள்ளவர்களும் தமிழக வெற்றி கழகத்தில் தொடர்ந்து இணைந்து கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சினிமா துறையில் நடிகர் விஜய் உடன் பல படங்கள் நடித்த நடிகர் சாப்ளின் பாலு தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். அதற்கான அடையாள அட்டை அவருக்கு வழங்கப்பட்டது.