
தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வருபவர் தல அஜித். இவர் நடித்த துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஏகே 62 திரைப்படத்திற்காக நடிகர் அஜித் தயாராகி வருகிறார். இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்க லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஓவர் சீஸ் சென்சார் போர்டு உறுப்பினர் உமர் சந்து நடிகர் அஜித்துக்கு வேறொரு பெண்ணுடன் கள்ள தொடர்பு இருப்பதாக ஒரு ட்விட்டர் பதிவை போட்டுள்ளார்.
இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில் அஜித் ரசிகர்கள் உமர் சந்துவை விளாசி வருகிறார்கள். சென்னை பக்கம் வந்து விடாதீர்கள் என்று அஜித் ரசிகர்கள் உமர் சந்துவை வறுத்தெடுக்கின்றனர். மேலும் நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். நடிகர் அஜித்துக்கு கள்ளத்தொடர்பு இருக்கிறது என்று சொன்னால் விஜய் ரசிகர்கள் கூட அதை நம்ப மாட்டார்கள் என நெட்டிசன்கள் பலரும் கூறி வருகிறார்கள்.
SHOCKING: #ThalaAjith is having “ Secret ” extra marital affair now a days.
— Umair Sandhu (@UmairSandu) March 17, 2023