டெல்லியின் பஜன்புரா பகுதியில் உள்ள புகழ்பெற்ற அகர்வால் சுவீட் கடையில் நடந்த சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கடையில் எலிகள் இனிப்புகளில் விளையாடி சாப்பிட்டு மகிழ்ந்த வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, அந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். எலிகளின் அட்டகாசத்தை கண்டும் காணாத ஊழியர்கள் வியாபாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டது உணவுப் பாதுகாப்பு மீறலாகவும் சமூக சீர்கேடாகவும் காணப்பட்டது.

சுகாதாரமற்ற சூழலில் விற்கப்படும் உணவுகள் பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த’வேண்டும் என மக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். உணவு சுத்தம் என்பது கடைக்காரர்களின் முதன்மையான பொறுப்பாக இருக்க வேண்டும். லாப நோக்கமே முந்தி நிற்கும்போது, உணவின் தரம் பல இடங்களில் புறக்கணிக்கப்படுகிறது.