நீண்டகாலமாக ஆதார் மற்றும் பான் இணைக்கப்படவேண்டும் என அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது இதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை வழங்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் ஆதார் மற்றும் பான் இணைக்கப்படவில்லை எனில் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். ஆகவே நீங்கள் இந்த சிக்கலிலிருந்து விலக அதை உடனே இணைக்க வேண்டும்.

இப்போது பான்-ஆதாரை எப்படி இணைக்கலாம் என்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். அதன்படி முதலாவதாக இந்திய வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வமான இணையத்தள பக்கத்திற்கு செல்லவும். தற்போது இடதுபக்கத்தில் இன்ஸ்டண்ட் இணைப்பின் விருப்பத்தை பெறுவீர்கள். இங்கே ஆதார் இணைப்பு விருப்பத்தினை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் பான்-ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். அதனை தொடர்ந்து OTP உங்களுக்கு அனுப்பப்படும். OTP உள்ளிட்டதும் ஆதார்-பான் இணைக்கப்படும்.

ஆதார்-பான் இணைப்பு நிலையை www.incometaxindiaefiling.gov.in-ல் சரிபார்க்க வேண்டும். தற்போது விரைவு இணைப்புகளுக்கு சென்று ஆதாரை இணைக்க வேண்டும். நிலையை அறிவதற்கு இங்கே ஹைப்பர்லிங்க் கிளிக் செய்ய வேண்டும். ஹைப்பர்லிங்கை கிளிக் செய்தபின், நீங்கள் பான் மற்றும் ஆதார் கார்டின் விபரங்களை நிரப்பவேண்டும். பின் View Link ஆதார் நிலையை கிளிக் செய்ய வேண்டும். அவ்வாறு கிளிக் செய்த பின் பான் மற்றும் ஆதார் இணைப்பின் நிலை அறியப்படும்.