RailYatri மிகவும் பிரபல பயன்பாடு மற்றும் இது IRCTC ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஆப். RailYatri-ல் இருந்து ஹேக் செய்யப்பட்டதாக  சொல்லப்படும் தரவுகளின் குறிப்பிடத்தக்க தொகுப்பு, பெயர்கள், மின் அஞ்சல் ஐடிகள், மொபைல்போன் எண்கள் மற்றும் அதன் பயனர்களின் இருப்பிடங்கள் போன்றவை டார்க் வெப் மன்றத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக RailYatri பயனாளர்கள் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய, அவர்களது PNR நிலையினை சரிபார்க்க மற்றும் இந்தியாவில் ரயில் பயணம் குறித்த பிற தகவல்களை சரிப்பார்க்க அனுமதிக்கிறது.

டேட்டா லீக் பற்றி சைபர் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். விசாரணை முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உஷார்படுத்தப்படும். RailYatri-ல் இருந்து 3.1 கோடி பயனாளர்களின் தரவுகள் மீறப்பட்ட மன்றத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஹேக்கர் யூனிட் 82 என அடையாளம் காணப்பட்டு உள்ளார். ஹேக்கர் இந்த இடுக்கையை பகிர்ந்துகொண்டு டிசம்பர் 2022ல் இது ஹேக் செய்யப்பட்டதாக கூறினார். டேட்டா லீக் பற்றி அதிகாரப்பூர்வமான அறிக்கை எதுவும் வரவில்லை என பெயர் தெரியாத நிலையில் ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். யூனிட் 82 பத்திரிக்கையாளர்களுக்கு $300 அதாவது சுமார் ரூபாய்.25,000க்கு டேட்டா விற்பனை செய்கிறது.