டைரக்டர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம் “காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்”. இப்படத்தில் வெந்து தணிந்தது காடு படம் வாயிலாக தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி நாயகியாக நடிக்கிறார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் இந்த படத்தின் புது அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த டீசர் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.