கடந்த 2021 ஆம் ஆண்டு வேலூர் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் வேலூரைச் சேர்ந்த டிக்காராம்(25) என்பவரை கைது செய்தனர். இவருக்கு நீதிமன்றம் மூன்று ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டு ஜாமினில் வெளிவந்த இவர் சென்னை குரோம்பேட்டில் சில குடியிருப்புக்கு எதிரே கட்டிட வேலையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஒரு வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த டிக்காராம் வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டியுள்ளார். அப்போது அவர் 10 சவரன் தங்க நகைகளை திருடியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது எதிரே கட்டிட பணி நடந்தது தெரியவந்தது. இதையடுத்து கட்டிட பணி செய்தவர்களை அழைத்து விசாரிக்கும் போது டிக்காராம் சிக்கி உள்ளார்.