இங்கிலாந்தில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் ஆட்டிசம் மற்றும் கற்றல் குறைபாடு உள்ள பெண் ஒருவரை அவரது ஏழு வயதிலிருந்து தற்போது 45 ஆண்டுகளாக தவறான புரிதலுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அந்த பெண் சியரா லியோனியை  சேர்ந்தவர் 25 ஆண்டுகளாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். இதனால் இவரை விடுவிக்க மருத்துவ வல்லுனரான டாக்டர் பேட்சி ஸ்டெய்ட் கடந்த  2013 ஆம் ஆண்டிலிருந்து அந்தப் பெண்ணை விடுவிக்க முயற்சி மேற்கொண்டு வந்துள்ளார். 9 ஆண்டுகள் போராடி 50 பக்க அறிக்கையை தயாரித்து அதன் மூலம் அந்தப் பெண் ஆபத்தானவர் அல்ல என்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.

அந்தப் பெண் மருத்துவமனையில் தீயணைப்பான்  முழங்கியதை தவறாக புரிந்து கொண்டு மற்றொரு நோயாளியை எதிர்பாராத விதமாக கீறியதால் அந்த சம்பவத்தை பெரிதாக்கி அப்பெண்ணை தனிமை சிறையில் வைத்துள்ளதை வல்லுனர் தெளிவுபடுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டில் தொடங்கிய விடுதலை நடவடிக்கை பல்வேறு தடைகளை சந்தித்து இறுதியில் நீதிமன்றத்தில் இந்த வழக்கு கொண்டு செல்லப்பட்டு தேவையான ஆவணங்களை அளித்து அப்பெண்ணை விடுதலை செய்தது. இதன்படி நீதிமன்றத்தின்  உதவியுடன் அந்தப் பெண் மனநல மருத்துவமனையில் இருந்து கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியேற அனுமதி கிடைக்கப்பெற்றது.

இதனை அடுத்து அப்பெண் தனிப்பட்ட பராமரிப்பு குழுவின் உதவியுடன் சமூகத்தில் சுதந்திரமாக வாழ்கிறார். அவருடன் பணியாற்றும் குழு அவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பதை உறுதி செய்துள்ளது. மேலும் அவருக்கு தேவையான வசதிகளையும் ஏற்படுத்தி உள்ளது. தற்போது பெண்ணுடன் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள உதவியாளர் கூறியதாவது, அவர் மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவர் ஆனால் அவரை தவறாக சித்தரித்து 45 ஆண்டுகள் அடைத்து வைத்துள்ளனர்.

இது மிகப் பெரிய தவறு. சில வாரங்களில் அந்தப் பெண் என்னை கட்டிப்பிடித்து அன்பை பரிமாறினார். அவர் என்ன  கொடூரமான மனிதரா? என கேள்வி எழுப்பியுள்ளார். ஆட்டிசம் மற்றும் கற்றல் குறைபாடு கொண்டவர்களை தேவையற்ற குற்றங்களை சுமத்தி மனநல மருத்துவமனையில் அடைத்து வைப்பது தவறாகும் என்பதை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.