
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி கிரீஷ்மா இந்த தம்பதியருக்கு கடந்த மூன்று மாதங்கள் முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் கிரீஷ்மா தனது குழந்தையுடன் தாயார் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் ஓணம் பண்டிகை ஒட்டி தனது கணவர் வீட்டிற்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். அப்போது இதற்காக தயாராகிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்துள்ளார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அறிந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.