
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ருத்ரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த இந்து (19) என்ற பெண்ணிற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. திருமணமான சில மாதங்களில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இந்து தனது கணவரை பிரிந்து திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள தனது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் முருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயபாலன் என்பவரின் மகன் குபேந்திரன் (30) கட்டட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 24 ஆம் தேதி இந்துவின் தாத்தா வீட்டிற்கு குடிபோதையில் சென்றுள்ளார். அங்கு அவர்களது வீட்டிற்குள் நுழைந்து பேசிக் கொண்டிருந்த இந்துவின் கழுத்தில் திடிரென்று தாலி கட்ட முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இந்து, அவரது தாத்தா மற்றும் பாட்டி அவரை தடுத்தனர்.
உடனே குபேந்திரன் அவர்களை தகாத வார்த்தையால் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். இதுகுறித்து இந்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் மேஸ்திரி குபேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தி சிறையில் அடைத்தனர்.