
குழந்தைகள் முதல் முதியவர் வரை என அனைத்து வயதினரும் பயன்பெறும் வகையில் தபால் அலுவலகம் மூலம் பல சேமிப்பு திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. இதில் பெண்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட சிறப்பு திட்டங்களும் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ். இதன் மூலம் அதிக வருமானத்தை பெறலாம். இதற்கான முதிர்வு காலம் 2 ஆண்டுகள் ஆகும்.
வீட்டில் இருக்கும் பெண்கள் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதனை வருகிற 2025 மார்ச்-க்குள் செய்ய வேண்டும். அதிகபட்ச முதலீடு தொகை ரூ.2 லட்சம். இதற்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. நீங்கள் 2 லட்சம் முதலீடு செய்தால் ரூ.32,044 வட்டி கிடைக்கும். ஓராண்டு முடிந்ததும் முதலீடு பணத்தில் 40% வரை திரும்ப பெறலாம்.