பீகாரில் தர்மவீர் யாதவ் (41) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் பசுவிற்கு தீவனம் வைப்பதற்காக சென்றபோது, ரசல்ஸ் விரியன் பாம்பு கடித்துள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை முதலில் உள்ளூர் வைத்தியர்களிடம் அழைத்து சென்றனர். அவர்கள் விஷத்தை எடுக்க பாரம்பரிய வைத்தியம் செய்தனர். இருப்பினும் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. அதனால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது அவருடைய 10 வயது மகன் பற்றவைக்க அருகில் சென்றார். அப்போது தர்மவீர் யாதவ் ஆடையில் இருந்து பாம்பு வெளியேறியது. அதாவது அந்தப் பாம்பு 16 மணி நேரம் அவரது ஆடைக்குள் இருந்துள்ளது. இதனால் அங்கு உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அவருக்கு சிகிச்சை அளித்த போதிலும், தகனத்திற்கு தயார் செய்த  போதிலும் அந்த பாம்பு கண்டறியவில்லை.