ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள தபாஸ் நகரில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சுமார் 50 தொழிலாளர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிப்பின் காரணமாக 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சுரங்கத்தில் வேலை பார்த்திருந்தபோது மீத்தேன் வாயு கசிவால் இந்தச் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

69 தொழிலாளர்கள் அங்கு பணிபுரிந்தபோது, வெடிவிபத்தில் சுரங்கத்தின் B மற்றும் C பகுதிகள் பலத்த சேதத்தை சந்தித்தன. குறிப்பாக, C பகுதியில் மீட்பு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், மீத்தேன் வாயு அடர்த்தி அதிகமாக இருப்பதால் நடவடிக்கைகள் சிக்கலாக உள்ளன. மேலும் தொழிலாளர்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.