
உத்திர பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அங்குள்ள ஆட்டோ ரிக்ஷா ஒன்றில் ஏறி உள்ளார். இதையடுத்து அந்த சிறுமியை மந்து யாதவ் (19), அமித் பிரஜாபதி(22) ஆகிய 2 இளைஞர்களும் அந்தச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனால் பயந்து போன அந்த சிறுமி மீண்டும் தனது பெற்றோரிடம் வந்து அழுது கொண்டே கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதோடு வழக்கு பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.