கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி நோக்கி கார் ஒன்று வந்தது. இந்தக் கார் உளுந்தூர்பேட்டை பைபாஸ் சாலையில் பண்ருட்டி நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்தக் காரில் வெளி மாநிலத்தவர்கள் டிரைவர் உட்பட 3 பேர் இருந்துள்ளனர். கார் திருவாமூர் அருகே வரும் பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டு இழந்து நிலை தடுமாறி அருகே உள்ள மரம், செடிகளுக்கு இடையே புகுந்தது. இதில் காரில் இருந்த இருவர் தலை தெறிக்க ஓடியுள்ளனர். மேலும் கார் ஓட்டுனரும் படுகாயத்தோடு காரின் உள்ளே சிக்கி இருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து காரின் ஓட்டுனரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த காரை சோதனை செய்தபோது குட்கா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் ஒன்று போதைப் பொருளோடு விபத்துக்குள்ளாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது