ஓஹியோ பில்லியனர் கடலில் மூழ்கி கைவிடப்பட்ட டைட்டானிக் கப்பலை பார்வையிட திட்டமிட்டுள்ளார்.

ஓஹியோவைச் சேர்ந்த பில்லியனர் லாரி கான்னர் கடலில் மூழ்கி கைவிடப்பட்ட டைட்டானிக் கப்பலை  பார்வையிட திட்டமிட்டுள்ளார். இதற்காக கான்னர் ட்ரைட்டன் நீர்மூழ்கிக் கல நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பான நீர்மூழ்கிக் கலத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். கடந்த ஆண்டு டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற ஓஷன் கேட் நிறுவனத்தின் நீர்மூழ்கிக் கலம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். ஆனால், இந்த விபத்து கான்னரை பாதிக்கவில்லை.

ஏற்கனவே மரியானா குழிவு (Mariana Trench) மற்றும் விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்த அனுபவம் மிக்கவர் கான்னர். டைட்டான் 4000/2 அபிசல் எக்ஸ்ப்ளோரர் என்ற இரு நபர் கொண்ட நீர்மூழ்கிக் கலத்தை பயன்படுத்த கான்னர் திட்டமிட்டுள்ளனர். இந்த கலம் 13,000 அடி ஆழம் வரை செல்லக்கூடியது. டைட்டானிக் கப்பல் பாகங்கள் சுமார் 12,500 அடி ஆழத்தில் இருப்பதால் இந்த கலம் பொருத்தமானது. டைட்டான் நீர்மூழ்கிக் கல விபத்தின் நினைவுகள் இருந்தாலும், தங்கள் பணியை தொடர கான்னர் மற்றும் லஹே உறுதியாக இருக்கின்றனர். இந்த பயணம் டைட்டானிக் பற்றி அறிவதற்கு மட்டுமில்லாமல் , எதிர்கால ஆழ்கடல் ஆய்வுகளுக்கும் வழிவகுக்கும்.