
திருச்சி மாவட்டத்தில் மே 31ஆம் தேதி மதச்சார்பின்மை காப்போம் மாபெரும் எழுத்து பேரணி கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான மண்டல வாரியான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது, நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம். திமுக கூட்டணி மட்டும்தான் தற்போது வலுவான கூட்டணியாக உள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை எதிர்க்கும் வலுவான அணி இன்னும் உருவாகவில்லை.
அதிமுக, பாஜக சேர்ந்ததாக கூறுகிறார்கள். ஆனால் அந்த கூட்டணி நீடிக்குமா என்று தெரியவில்லை. தவெக தலைவர் விஜய் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. ஆதலால் இன்னும் திமுகவை எதிர்க்க வலுவான அணி ஒன்றும் உருவாகவில்லை என்று தெரிவித்தார். விடுதலை சிறுத்தை கட்சியை பொறுத்த வரை நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் ஒரு கட்சியில் இருக்கிறோம். திமுக கூட்டணியில் தான் விசிக தொடரும் அதில் எந்த ஊசலாட்டமும் இல்லை என்று தெரிவித்தார்.