காம்போடியாவில் 5 வயதாகும் ஆப்பிரிக்க ரொனின் என்ற எலி உலக சாதனை செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அதாவது APOPO என்னும் தொண்டு நிறுவனம் உலக எலி நாளான ஏப்ரல் 4ம் தேதி ரொனின் இதுவரை 109 நிலை மருந்துகளும், 15 வெடிக்காத பொருள்களையும் கண்டறிந்து தனது சக எலிகளை விட அதிக சாதனை படைத்துள்ளதாக செய்தி வெளியிட்டது.

அந்த நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளாக வெடிகுண்டுகளை கண்டறிய எலிகளுக்கு பயிற்சி கொடுத்து வருகிறது என்று கூறப்படுகிறது. அதோடு அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒருவர் ரொனின்தான் இதுவரை அதிக வெற்றி பெற்ற எலி என்றும், அவனுக்கு வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பது ஒரு விளையாட்டு போலவே உள்ளது என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து அந்த எலியின் பயிற்சியாளர் பானி, ரொனினின் சாதனைகள் நேர்மறையான ஊக்கமளிக்கும் பயிற்சி முறையின் அற்புதமான விளைவுகள் என பெருமையுடன் கூறியுள்ளார். எலிகளுக்காக செயல்பட்டு வரும் APOPO அமைப்பு தங்கள் heroRATS என்ற பெயரில் 300க்கும் மேற்பட்ட எலிகளை வெவ்வேறு திட்டங்களில் ஈடுபடுத்தி செயல்பட்டு வருகிறது.

அதன்படி ஒரு நாளைக்கு வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே வேலை செய்வதற்கும், மீதமுள்ள நேரத்தில் ஓய்வு மற்றும் விளையாட்டுக்கான நேரம் வழங்குவதால் எலிகளின் புத்திசாலித்தனமும் கண்டுபிடிக்கும் திறமையும் உயர்வாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. மேலும் எலிகள் நிறைய எடை இல்லாத காரணத்தால்  நிலை மருந்துகள் மீது நடக்கும் போது வெடிகுண்டு வெடிக்காததால் இந்த அமைப்பு எலிகளுக்கென்று பிரத்யேகமாக பயிற்சி அளித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.