உலகளவில் ஒருவருக்கு மட்டும் குவாடா நெகடிவ் என்னும் புதிய ரத்த வகை கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக மனிதர்களிடையே O+, O-,A+,A- என 47 ரத்த வகைகளை உள்ளது. இதில் சில ரத்த வகைகள் உலகளவில் பெரும்பாலானோருக்கு இருக்கும். ஆனால் சில ரத்த வகைகள் அரிதானது. இந்நிலையில் உலகில் ஒரே ஒருவருக்கு மட்டும் அரிய ரத்த வகை கண்டறியப்பட்டது.
இந்த ரத்த வகைக்கு குவாடா நெகடிவ் என்ற பெயர் உள்ளது. கடந்த 2011ம் ஆண்டில் பிரான்சின் பாரிசில் உள்ள 54 வயதான பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது ரத்த வகை என்ன என்பதை உறுதி செய்ய முடியவில்லை.
பொதுவாக அனைவருடைய சிவப்பு இரத்த அணுக்களில் உள்ள EMM ஆண்டிஜென் இந்த பெண்ணின் இரத்தத்தில் இல்லை . இந்நிலையில் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, இது 48வது அரிய வகை ரத்தம் என்பது கண்டறியப்பட்டது. இந்த ரத்த வகை அந்தப் பெண் அவரின் பெற்றோரிடமிருந்து மாற்றமடைந்து மரபணுவை பெற்றிருக்கிறார். அவரின் தாய், தந்தைக்கு கூட இந்த ரத்த வகை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.