
மும்பை மாநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கணக்கு அதிகாரி, வாட்ஸ்அப்பில் வந்த போலி தகவலை நம்பி ரூ.30 லட்சம் பணத்தை மோசடியாளருக்கு பரிமாற்றம் செய்த பரிதாபமான சம்பவம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. GESPORTS Pvt Ltd எனும் நிறுவனத்தின் 61 வயது கணக்கு அதிகாரிக்கு, கடந்த மார்ச் 24 ஆம் தேதி மாலை ஒரு புதிய வாட்ஸ்அப் எண்ணிலிருந்து செய்தி வந்துள்ளது.
அந்த எண்ணின் தலைப்புப் படம் (DP), உண்மையான நிறுவன இயக்குநரான ருஷிந்திரா சின்ஹாவின் புகைப்படம் இருந்ததால், அவர் அதனை நம்பி விட்டார். அந்த மோசடியாளர், “நான் சின்ஹா தான் பேசுறேன்… இது என் புதிய வாட்ஸ்அப் எண்” என கூறி, புது திட்டத்துக்காக ₹50 லட்சம் ப்ரீ-பேமெண்ட் செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
அதேபோன்று அடுத்த நாள், ₹20 லட்சம் பணம் வேறு ஒரு வங்கிக் கணக்குக்கு அனுப்பும்படி கூறியதும், சந்தேகமடைந்த கணக்கு அதிகாரி இதுகுறித்து அவர் உடனடியாக 1930 சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண்ணில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக மேற்கு மண்டல சைபர் போலீசார் வழக்கு பதிவு செய்து, பணம் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்குகள் மற்றும் வாட்ஸ்அப் எண்ணின் விபரங்களைத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வகை மோசடிகள் அதிகரித்து வருவதால், தொழில்துறை நிறுவனங்களும், தனிப்பட்ட நபர்களும் எந்தவொரு பிளாட்ஃபார்மிலும் வந்த பண கோரிக்கைகளையும், நேரடி உறுதிப்படுத்தல் இல்லாமல் ஏற்கவே கூடாது என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.