துருக்கி சிரியா எல்லையை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட அதிர்வில் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. மேலும் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் திரும்பிய இடமெல்லாம் பிணக்குவியலும் மர்ம ஓலங்களும் கண்ணீர் வரவழைக்கும் காட்சிகளும் மட்டுமே காண முடிகின்றது. மலை போல் குவிந்து கிடக்கும் கட்டிட ஈடுபாடுகளுக்குள் சிக்கி இருக்கும் மக்களை மீட்பதற்காக மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர். இந்த பணியில் இந்தியா உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை இரு நாடுகளிலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் விஜயகுமார் மலாட்யா என்ற இந்தியர் ஒருவர் தங்கியிருந்த ஹோட்டல் முற்றிலுமாக இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளது. அந்த பகுதியில் கட்டிட இடுபாடுகளை அகற்றும் பணி தற்போது நடந்து வருகின்றது. இதில் மாயமான விஜயகுமார் ஹோட்டலின் இடுப்பாடுகளில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை துருக்கியில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.